Wednesday 18 January 2012

வாழ்த்த வயது




வாழ்த்த வயதில்லையே என ஏங்குபவரா , நீங்கள் ? ஏக்கத்தை நீக்குங்கள் : உங்களுக்கு ஓர் இனிய செய்தி : யாரும் யாரையும் வாழ்த்தலாம் :

ஞானசம்பந்தர் , " வாழ்க அந்தணர் , வானவர் ... " என்று தேவரை வாழ்த்தினாரே !

பாரதியார் , தம்மினும் 13 வயது மூத்தவரான காந்தியடிகளை வாழ்த்தவில்லையா ? ஒரு பாடலை " வாழ்க நீ எம்மான் " எனத் தொடங்கி , " மகாத்மா நீ வாழ்க வாழ்க ! " என்று முடித்துள்ளார் .

ஆகையால் வாட்டம் விடுக , வாழ்த்தி மகிழ்க !

1 comment:

  1. வாழ்த்த வயது தேவையில்லை என்னும் தகவலை அறியச் செய்த தங்களுக்கு என் வாழ்த்தும் நன்றியும்.

    ReplyDelete