Saturday 24 March 2012

லத்தீன் பழமொழிகள் இரண்டு



மக்களின் பட்டறிவால் பிறப்பவை பழமொழிகள் ; அவை எல்லா மொழிகளிலும் உண்டு.

தமிழைப் போன்று தொன்மை வாய்ந்த லத்தீனின் பழமொழிகளுள் நமக்குப் பரிச்சயமான இரண்டினைத் தருகிறேன்:

1 - வோக்ஸ் பொப்புலி வோக்ஸ் தெஈ ( Vox populi vox Dei ) இதன் பொருள்: மக்களின் குரல் தெய்வத்தின் குரல்.

இதை மக்கள் குரலே மகேசன் குரல் என நாம் சொல்லுகிறோம்.

2 - எர்ராரே ஹுமானும் ஏஸ்த் ( Errare humanum est ) பொருள் : தவறுதல் மனித இயல்பு.

இதனை ஆங்கிலக் கவிஞர் அலெக்சாண்டர் போப் To err is human என மொழிபெயர்த்தார் . அவரிடமிருந்து நாம் பெற்றோம்.

3 comments:

  1. புதிய தகவல்களை அறியத் தந்தமைக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  2. பழமொழிப்பகிர்வுகள் ரசிக்கவைத்தன. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. லத்தீன் பழமொழிகள் பற்றியறிந்தேன். மிக்க நன்றி.

    ReplyDelete