Tuesday 17 July 2012

ஏவாள், பண்டோரா




விவிலியத்தின்படி,  உலகின் முதல் பெண் ஏவாள். கர்த்தரின் கட்டளையை மீறி, பழத்தைத் தான் உண்டதோடு கணவனையும் உண்ணச் செய்து, இருவரும் பாவிகளானமையால் மனிதக் குலம் முழுதையும் பாவக் குழியில் தள்ளியவள்.


முதல் பெண், பண்டோரா என்கிறது கிரேக்கத் தொன்மம்: சீயஸ் கடவுள் களிமண்ணால் அவளை உருவாக்கச்செய்து உயிரளித்தார். மாந்தர்களைத் தண்டிப்பதற்காக அவளிடம் ஒரு பெட்டியைத் தந்து உலகத்துக்கு அனுப்பினார். திறக்கக் கூடாது என்ற அவரது ஆணையைப் புறக்கணித்து மூடியைத் திறந்தான் அவளுடைய மணவாளன். அதிலிருந்து வெளிக் கிளம்பி எங்கும் பரவின எல்லாவிதத் தீமைகளும்.


ஆங்கிலத்தில் பண்டோராவின் பெட்டி ( Pandora's Box ) என்ற சொற்றொடர் எதிர்பாராத மற்றும் கடும் தொல்லைகளின் ஊற்று எனப் பொருள்படும்.


ஆண்டவன் கட்டளையை மீறியவர்கள் யூதரின் மறைப்படி பெண், கிரேக்க நம்பிக்கைப்படி ஆண்.

படம் உதவி: இணையம்

6 comments:

  1. நல்லதொரு தகவல் !!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு மிகுந்த நன்றி .

      Delete
  2. பெண்ணுக்கு எதிரானா ஆணின் எழுத்து அது ...........பெட்டியை தரும் போதே திறக்க முடியாதபடி பூட்டை போட்டு தர வேண்டியது தான ? அதை விடுத்து இவர்கள் திறந்த பெட்டியை தந்து ....
    இவள் எப்போது திறப்பால் அவள் மேல் பலி போட்டு அவளை கீழே தள்ளலாம் என்று காத்திருக்கும் குரூரர்களின் சதி இந்த கதை ...............இதை கண்டிக்கிறேன் நான்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கண்டிப்பது நியாயம் . ஆணாதிக்க உலகில் எல்லா மொழிப் படைப்புகளும் பெண்ணைத் தாழ்த்தியே உள்ளன . கதை என்ற முறையில் தெரிந்துகொள்வதற்கு உரியது . இந்து மத நூல்கள் மகளிரை எவ்வளவு இழித்துள்ளன ! உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .

      Delete
  3. நல்லதொரு தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி .
    தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுரைக்கு மிகுந்த நன்றி .

      Delete