Monday 27 August 2012

முன்னோடி


 

பயன்பாட்டுக்குக் கார் வருவதற்கு முன்பு பெருஞ் செல்வர்களுக்கு இரட்டைமாட்டு வில் வண்டிகள் உதவின; அவர்கள் பயணிக்கையில், முன்புறமாய் ஒருவர், "ஐயாவோட வண்டி வருது" என அறிவித்துக்கொண்டு ஓடுவார்.  
பாதசாரிகள் ஓரமாய் ஒதுங்கி வழிவிடுவார்கள்; படுத்திருப்போர், அமர்ந்திருப்போர் மரியாதைக்கு அறிகுறியாக எழுந்து நிற்பார்கள். 

முன்னால் ஓடுபவரை முன்னோடி (முன் + ஓடி) என்றார்கள்; முன்னோடும்பிள்ளை என்பதுமுண்டு.  

இதற்கு இணையான ஆங்கிலச் சொல் ப்ரிக்கர்சர் (Precursor ). ப்ரி - முன்; கர்சர் - ஓடுபவர். Forerunner என்பதும் அப்பொருள் உடையது.

முன்னோடி என்னும் சொல் இன்று வேறு அர்த்தத்தில் வழங்குகிறது.  

அறவழிப் போராட்டத்துக்கு முன்னோடி காந்தி, தமிழ்ப் புதினத்துக்கு முன்னோடி பிரதாப முதலியார் சரித்திரம் என ஒரு துறையில் பிறர்க்கு / பிறவற்றுக்கு வழிகாட்டிகளை அச் சொல் குறிக்கிறது.
*******************************************************************

படம் உதவி ; இணையம்

6 comments:

  1. முன்னோடி -- பற்றி சிறப்பான செய்திகள் ! பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி .

      Delete
  2. Replies
    1. உங்கள் கருத்துரைக்கு அகமார்ந்த நன்றி .

      Delete
  3. சிறப்பான பகிர்வு ஐயா... வாழ்த்துக்கள்... நன்றி… (த.ம. 1)

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வாசித்துப் பாராட்டும் உங்களுக்கு என் உளமார்ந்த நன்றி .

      Delete