Thursday 11 April 2013

முழுக்க நம்பாதீர்கள்



 

இது விளம்பர உலகம்: அன்றாடம் பல வகை விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கின்றன, காதைத் துளைக்கின்றன; 

சுவை நல்குபவை சில; எரிச்சல் ஊட்டுபவை வேறு சில. நுகர்வோரைக் கவர்வதற்காக எத்தனையோ உத்திகள் கையாளப்படுகின்றன; அவற்றுள் அடிக்கடி இடம் பெறும் சொற்கள் புதிய, இலவசம், ஃபார்முலா முதலியவை.  

விளம்பரம் சொல்வது என்ன என்பதைத் தெரிந்துகொள்கிற நாம் அது என்ன சொல்லவில்லை என்பதை ஊகித்து உஷார் ஆவது முக்கியம். 

சில காட்டுகள்: 


     சொன்னது

சொல்லாதது

1.      மனைக்கு மிக அருகில் ரயில் நிலையம் உள்ளது.

அங்கே முக்கிய வண்டிகள் நிற்காது.

2.      ஐந்து நிமிடத்தில் பேருந்து நிலையம்.

காரில் போனால்.

3.      இப்போது அதிக ஊட்டச் சத்துடன்.

இப்படிச் சொன்னாலாவது வாங்க மாட்டீர்களா?

4.      மூன்று கோடி பேர் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

இதை நம்ப லட்சம் பேராவது இருப்பார்கள்.

5.      ஆடித் தள்ளுபடி.

தேங்கிக் கிடப்பதைத் தள்ளிவிடுவது.

6.      பரபரப்பாக விற்பனை ஆகிறது.

அப்படி விற்றால் இந்த விளம்பரம் ஏன் கொடுக்கிறோம்?

7.      ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்.

இரண்டுக்கும் சேர்த்துத்தான் விலை.

8.      எப்போது வேண்டுமானாலும் நீங்கள் ஃபோன் செய்யலாம்.

ஏனோ தானோ பதில்தான் கிடைக்கும்.

9.      இது முடி கொட்டுவதைத் தடை செய்யும்.

தடையை மீறிக் கொட்டினால் நாங்கள் பொறுப்பல்ல.

10.   திருப்தி இல்லையேல் பணம் திரும்பப் பெறலாம்.

நாங்கள் கொடுத்தால்.

3 comments:

  1. ஹா... ஹா... சரியாகச் சொன்னீர்கள் ஐயா சொல்லாததை...

    நன்றி...

    ReplyDelete
  2. நகைச்சுவை போல் நம் மக்களிடம் இருக்கும் அறியாமையை அழகாக உணர்த்திவிட்டீர்கள். நன்றியும் பாராட்டும்.

    ReplyDelete