Friday 31 May 2013

பிறப்பால் உயர்வு தாழ்வு


 சங்க காலத்தில் சில வகைத் தொழிலாளர் பிறப்புக் காரணமாய் இழிவாய்க் கருதப்பட்டனர் என்று சொன்னால் சிலர் ஏற்க மறுக்கலாம்; ஆனால் ஆதாரம் உண்டு: 

1 - புறம் 82 : கட்டில் நிணக்கும் இழிசினன் --- (கயிற்றுக் கட்டில் பின்னும் இழிமகன்). 

2 - புறம் 259 : முருகு மெய்ப்பட்ட புலைத்தி -- (தெய்வம் உடம்பில் ஏறியதால் ஆவேசம் கொண்ட கீழ் மகள்) 

3 - புறம் 287 :  துடி எறியும் புலைய! எறிகோல் கொள்ளும் இழிசின! (உடுக்கை அடிக்கிற கீழ்மகனே ! பறை முழக்குகிற கோலை உடைய இழிந்தவனே!) 

4 - புறம் 289 : தண்ணுமை இழிசினன் -- (மத்தளம் கொட்டுகிற இழிந்தவன்) 

5 - புறம் 311 : புலைத்தி கழீஇய தூவெள் அறுவை -- (கீழ்ப் பெண் துவைத்த வெள்ளைத் துணி) 

6 - புறம் 360 : புலையன் ஏவ-- (இழிந்தவன் கட்டளை இட) 

7 - புறம் 363 : இழிபிறப்பினோன் ஈய -- (தாழ்ந்த பிறப்பை உடையவன் தர) 

8 - நற்றிணை 90 : புலைத்தி எல்லித் தோய்த்த கலிங்கம் --(கீழ்மகள் பகலில் வெளுத்த துணி)  

பிற்கால சமயப் பெரியவர்களும் இக் கொள்கை உடையவரே: 

"ஆ உரித்துத் தின்று உழலும் புலையர்" என்பது அப்பர் வாக்கு. 

வேடன் குகனைத் திருமங்கை ஆழ்வார், "ஏழை ஏதலன் கீழ்மகன்" என்றார்.

2 comments:

  1. ஆதார தகவல்களுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  2. ஆனால் பிறப்பு உயர்வு தாழ்வு என்பது மடத்தனமான செயல் என்பது அறிவுக்கு எட்டாத விசயம்

    ReplyDelete