Monday 22 July 2013

அற்புதச் சிகிச்சை - காட்சி 4 & 5

                             
பாத்திரங்கள் :

ஸ்கானாரேல்  -   தந்தை
லுய்சய்ந்து   -  மகள்.
லிசேத்து  -  வேலைக்காரி.

                              
                                                     காட்சி  4
லிசேத்து  சரியாய்த்தான்  சொன்னார்கள்கேட்க  விரும்பாதவர்களைவிட  மோசமான  செவிடர்   இல்லை  என்று.

லுய்சய்ந்து  -  என்  வெறுப்பை    நான்  மறைத்தது  தவறுபேசிமட்டும்  இருந்தால்  நான்  விரும்பியதை  யெல்லாம்  அப்பாவிடமிருந்து  பெற்றிருக்கலாம்.

லிசேத்து  ஊக்கும்அவர்  ஒரு  மோசக்காரர்அவரைத்  தந்திரமாக  ஏமாற்றுவதில் எனக்கு   உச்சக்  கட்ட  மகிழ்ச்சி  ஏற்படும்  என்பதை  உங்களிடம் வெளிப்படையாகச்  சொல்கிறேன்.    நான்  செய்யப்போவதைப்  பாருங்கள்.

லுய்சய்ந்து  -  ஆனால்    தந்தையின்  அதிகாரத்தை  எதிர்த்து  நான்  என்ன  செய்ய  முடியும்என்  விருப்பத்திற்கு  இணங்காதவராக  அவர்  இருந்தால் ...

லிசேத்து  - ஆட்டு  மந்தை  மாதிரி  நம்மை  ஓட்டிப்  போக  விடக்கூடாது.     தகப்பனின்  கொடுங்கோன்மையிலிருந்து  கொஞ்சம்  விடுதலை  பெற  முடியும்.   கல்யாண  வயது  உங்களுக்கு  வந்துவிடவில்லையா?    உங்கள்  காதலுக்கு     உதவ  விரும்புகிறேன். இப்போதே  என்மேல்  அதற்கான  முழுப்  பொறுப்பையும் போட்டுக்  கொள்கிறேன். எனக்குப்  பல  சூழ்ச்சி  தெரியும்  என்பதைக்  காண்பீர்கள். அதோஅப்பா  வருகிறார்உள்ளே  போவோம்;     என்னைச்  செயலாற்ற  விடுங்கள்.
                                                                                                                                              
                           ++++++++++++++++++++++++++++

                                                                       
                                                               காட்சி  5

                                            ஸ்கானாரேல்   (  தனிமொழி )
             நன்றாகக்  காதில்  விழுகிற  தகவல்களைக்  கேட்காத  மாதிரி  நடந்துகொள்வது  சில  சமயம்   நல்லதாக  இருக்கிறது.    நான்  நிறைவேற்ற  விரும்பாத     ஓர்  ஆசையை  வெளிப்படுத்தியதைப்     புத்திசாலித்தனமாய்த்    தடுத்துவிட்டேன்.    தந்தைமார்களை  அடிபணிய  வைக்க  விரும்புகிற     ஒரு  வழக்கத்தைக்  காட்டிலும்      மிகுந்த  கொடுங்கோன்மையை     எப்போதாவது     பார்த்திருக்கிறோமா?   கடின  உழைப்பால்  செல்வம்  சேர்த்து,    ஒரு  பெண்ணை    அதிக  அக்கறையுடனும்    பாசத்துடனும்  வளர்த்து,     இரண்டையும்    நமக்கு  அறவே  தொடர்பு  இல்லாத    ஒருவனின்  கைகளில்  தருவதைப்  பார்க்கிலும்    முறையற்றது    மற்றும்    ஏளனத்துக்கு  உரியது  வேறெதுவும்  இல்லை.   முடியாதுமுடியாது,     இந்த  வழக்கத்தை    நான்  பொருட்படுத்த  மாட்டேன்என்னிடமே  வைத்துக்கொள்ள  விரும்புகிறேன்சொத்தையும்  பெண்ணையும்.

                                                                              ( தொடரும் )                                                          

1 comment:

  1. ஸ்கானாரேல் - தனிமொழி சிந்திக்க வைக்கிறது...

    ReplyDelete