Wednesday 25 September 2013

அரை நூற்றாண்டுக்குமுன் திருமணம் -- 3



               

மதிய உணவு --- உண்பதற்கு என்று அக்கம் பக்கவீட்டார் தம் இல்லின் முன்பகுதியைக் காலி செய்து தருவர்ஒரு தடவையில் (பந்தி என்று பெயர்) முப்பது பேர் சாப்பிடலாம். இரட்டைக் கதவில் ஒன்று மட்டும் திறந்திருக்கும்: ஒருவர் மாத்திரம் நுழையலாம்.

மணமகன் உறவினர் ஒருவரும் பெண்ணின் சொந்தக்காரர் ஒருவரும் கதவின் அருகில் நின்று,    வரிசையாய் வருபவர்களுள் அந்நியர் இருந்தால்,  "நீங்கள் அப்புறம் சாப்பிடலாம்" என்று சொல்லி நீக்கிவிடுவார்கள். உள்ளே இடம் நிரம்பியதும் கதவு மூடப்படும்;
இனி அடுத்த பந்திதான். சாப்பாட்டுக்காக வரிசையில் நிற்பதே கேவலம் தான். கதவருகே போயும் திரும்பி வர வேண்டியிருந்தால், அதைவிட அவமானம். இரண்டையும் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்முதல் பந்தியில் இடம் கிடைத்தவர்,   நாம் இன்னம் உண்ணவில்லை என்பதை அறிந்து,   " பந்திக்கு முந்திக் கொள்ள வேண்டும்"  என்று உபதேசம் செய்கிற  பண்பாட்டுக் குறைவான பேச்சையும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்;   வேறு வழி இல்லை.

மின்விசிறிகள் அநேகமாய் இருக்காதுபனை மட்டையால் தயாரித்த அகலமான விசிறிகளை இரு பக்கமும் வீசி விருந்தினரின் புழுக்கத்தைக் குறைப்பது சிலரது பணி. 

மூன்று பந்திக்குப் பின்பு பெண்டிர்க்கும் குழந்தைகளுக்கும் பந்திபாவம் அதுவரை அவர்கள் பசியோடு காத்திருக்க வேண்டும். 

அதன் பின்புதான் கல்யாண வீட்டுக்காரர்களும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தோரும் உண்பார்கள். சாப்பிட்டு முடித்தோர் கை கழுவுவது எப்படிவீட்டின் வெளியே வைத்துள்ள நீர் நிரம்பிய பெரிய அண்டாவின் அருகில் சென்று இருவர் மூவராகக் குனிந்து கை நீட்டும்போதுஅங்கேகையில் சொம்பு நீருடன் தயாராய் நிற்கிற இருவர்கொஞ்சம் கொஞ்சமாய்நிறுத்தி நிறுத்தித் தண்ணீர் ஊற்றுவர்அண்டா அவ்வப்போது நிரப்பப்படும்.

மாலையில் பெண்ணும் மாப்பிள்ளையும் காரில் சேர்ந்து அமர்ந்து ஊர்வலம் வருவது உண்டு.  வசதி உடையவராயின் பந்தலில் இசைக் கச்சேரி நிகழும்.

  (பெண்ணழைப்புமாப்பிள்ளையழைப்புகச்சேரி ஆகியவை நாளடைவில் ஒவ்வொன்றாய்க் குறைந்து பின்பு மறைந்தேபோயின.)


                                                            (தொடரும்)

2 comments:

  1. முதன் முறையாக தங்களின் வலைப் பூ விற்கு வருகை தந்தேன் ஐயா, இனிதொடர்வேன்.
    நேரம் இருக்கும் பொழுது எனது வலைப் பூவிற்குத் தங்களை அன்புடன் அழைக்கின்றேன்
    http://karanthaijayakumar.blogspot.com/

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி . அன்போடு வரவேற்கிறேன் . உங்களின் வலைப்பூவிற்கு அழைத்தமைக்கு அகமார்ந்த நன்றி . தொடர்ந்து வந்து எனக்கு ஊக்கம் தரக் கேட்டுக்கொள்கிறேன் .

    ReplyDelete